ஆன்மீகச் சங்கமம்: ஒரே நாளில் தொடங்கும் சாம்பல் புதனும் புனித ரமலானும்

ஒரே நாளில் கிறிஸ்தவர்களின் புனித சாம்பல் புதனும் இஸ்லாமியர்களின் புனித ரமலானும் வந்திருப்பது நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

M

எழுதியவர்

3 மாதங்களுக்கு முன்
ஆன்மீகச் சங்கமம்: ஒரே நாளில் தொடங்கும் சாம்பல் புதனும் புனித ரமலானும்

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் மகுடம் சூட்டும் வகையில், இந்த ஆண்டு கிருஸ்தவர்களின் புனித சாம்பல் புதன் மற்றும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு காலம் ஆகியவை ஒரே நாளில் தொடங்குவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுயக்கட்டுப்பாட்டின் தொடக்கம்

கிறிஸ்தவ நாட்காட்டியின்படி, ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்கள் 'தவக்காலம்' (Lent) எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான இன்று 'சாம்பல் புதன்' அனுசரிக்கப்படுகிறது. "மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற தத்துவத்தை நினைவூட்டும் விதமாக, தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

மறுபுறம், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் நோன்பு காலமும் இதே நாளில் தொடங்குவதால், நாடு முழுவதும் ஒரு தெய்வீக அமைதி நிலவுகிறது. அதிகாலை முதல் மாலை வரை நீர் கூட அருந்தாமல் இறை சிந்தனையுடன் இஸ்லாமியர்கள் தொடங்க உள்ளனர்.

நல்லிணக்கத்தின் வெளிப்பாடு

மதங்கள் வேறாக இருந்தாலும், அவை போதிக்கும் தர்மம் ஒன்றுதான். பசியையும் தாகத்தையும் அடக்கி, ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பக்குவத்தை இந்த இரண்டு பண்டிகைகளுமே வலியுறுத்துகின்றன. ஒரே வீதியில் ஒரு கிறிஸ்தவர் தவக்கால நோன்பையும், ஒரு இஸ்லாமியர் ரமலான் நோன்பையும் கடைப்பிடிப்பது இந்தியாவிற்கே உரிய தனிச்சிறப்பு.

பகிர்தலும் வழிபாடும்

இந்தக் காலகட்டத்தில் இரு மதத்தினருமே தர்மம் செய்தல், பிறருக்கு உதவுதல் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், மசூதிகளில் ரமலான் கால சிறப்புத் தொழுகைகளான 'தராவீஹ்' தொழுகைக்கான ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் இந்த இனிய தருணம், சமுதாயத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...