"மருதாணி"அழகைத் தாண்டி ஆரோக்கியம் தரும் இயற்கை வரம்

பண்டிகைகள், திருமணங்கள், விழாக்கள் போன்ற சிறப்பு தருணங்களில் கைகள், கால்கள் அலங்கரிக்க மருதாணி பயன்படுத்துவது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறியுள்ளது.

3 மணி நேரத்திற்கு முன்
"மருதாணி"அழகைத் தாண்டி ஆரோக்கியம் தரும் இயற்கை வரம்

இந்திய பெண்கள் பண்டிகைகள், திருமணங்கள், விழாக்கள் போன்ற சிறப்பு தருணங்களில் தங்கள் கைகள், கால்கள் அலங்கரிக்க மருதாணி பயன்படுத்துவது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறியுள்ளது. ஆனால், மருதாணி வெறும் அழகுக்கான அலங்காரம் மட்டுமல்ல; அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு இயற்கை மூலிகை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருந்து

கோடை காலத்தில் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த மருதாணி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கைகள் மற்றும் பாதங்களில் மருதாணி வைத்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு குறைந்து, பாத எரிச்சல், கண் வறட்சி போன்ற பிரச்சனைகள் தணியும்.

மனஅழுத்தத்துக்கு தீர்வு

மருதாணியில் உள்ள இயற்கை குளிர்ச்சி தன்மை மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகள் குறைந்து, மன அமைதி அதிகரிக்கிறது.

சரும மற்றும் நக ஆரோக்கியம்

மருதாணி இலைகள் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்டவை. நகங்களில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகளை நீக்கி, நக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சொறி, சிரங்கு, படர் தாமரை போன்ற தோல் நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

பெண்கள் நலத்திற்கு உதவும்

சில ஆய்வுகளின்படி, மருதாணி மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் வெள்ளை படுதல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்தும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

தலைமுடி பராமரிப்பில் மருதாணி

மருதாணி இயற்கையான முடி நிறமியாகப் பயன்படுகிறது. நரை முடியை மறைக்கவும், முடி உதிர்வை குறைக்கவும், பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. மருதாணி இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பதால் தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

குதிகால் வெடிப்பு மற்றும் பாத பராமரிப்பு

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் பூசுவதன் மூலம் குதிகால் வெடிப்பு, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

மொத்தத்தில், மருதாணி ஒரு அழகு சாதனப் பொருளாக மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் இயற்கை மருந்தாகவும் திகழ்கிறது. பாரம்பரியத்தில் இருந்து வந்த இந்த பழக்கம், இன்றும் ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு எளிய வழியாக தொடர்ந்து பயன்பட்டு வருகிறது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...