முளைகட்டிய பச்சை பயறு: உடல் நலத்திற்கு அள்ளிக் கொடுக்கும் பலன்கள்

முளைகட்டிய நிலையில் பச்சை பயறு உட்கொள்வது உடலுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும்

3 மணி நேரத்திற்கு முன்
முளைகட்டிய பச்சை பயறு: உடல் நலத்திற்கு அள்ளிக் கொடுக்கும் பலன்கள்

புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் முக்கிய விட்டமின்கள் நிறைந்த பச்சை பயறு, ஆரோக்கியத்திற்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக முளைகட்டிய நிலையில் இதனை உட்கொள்வது உடலுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் என கூறப்படுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும் திறன்

காலையில் முளைகட்டிய பச்சை பயிறை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இது குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களை ஆதரிக்கும் பிரீபயாடிக் தன்மையையும் கொண்டுள்ளது.

விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைவு

பச்சை பயிறில் புரதம், விட்டமின் A, B, E, மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடலின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தசோகை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு

குறைந்த கொழுப்பு மற்றும் சோடியம் உள்ள உணவாக இருப்பதால் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதுடன், நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை அளவு கட்டுப்பாடு

நீரிழிவு நோய் மற்றும் முன்-நீரிழிவு நிலை கொண்டவர்களுக்கு பச்சை பயறு ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது. மேலும் பித்தத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

எடை குறைப்புக்கு உதவும் உணவு

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் இது ஏற்ற உணவாகும். அதிக புரதமும் நார்ச்சத்தும் உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவான உணர்வை தருகிறது. குறைந்த கலோரியில் அதிக ஊட்டச்சத்து கிடைப்பதால் டயட் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முடி மற்றும் சரும ஆரோக்கியம்

முடி உதிர்வை குறைக்கவும், சருமம் பொலிவுடன் இருக்கவும் பச்சை பயறு உதவுகிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளை எதிர்க்க உடலுக்கு வலு அளிக்கிறது.

இருப்பினும், பச்சை பயிறை நேரடியாக பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்து அல்லது முளைகட்டிய நிலையில் உண்பது செரிமான கோளாறுகளைத் தவிர்க்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தினசரி உணவில் முளைகட்டிய பச்சை பயிறை சேர்த்துக் கொள்வது உடல் நலத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு நோய்களைத் தடுக்கும் ஒரு எளிய வழியாக அமையும் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...