யோகி பாபு நடிக்கும் ‘An Ordinary Man’: இயக்குநராக களம் காணும் ரவி மோகன்

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘An Ordinary Man’ சமூக நகைச்சுவைத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
யோகி பாபு நடிக்கும் ‘An Ordinary Man’: இயக்குநராக களம் காணும் ரவி மோகன்

தமிழ் திரையுலகில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ரவி மோகன், ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களைத் தயாரிப்பதாக அறிவித்திருந்தார். அதில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தை ரவி மோகனே இயக்கித் தயாரிக்க உள்ளார். நகைச்சுவை கலந்த சமூகக் கருத்துள்ள கதைக் களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் எளிமையான படப்பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதன் மூலம் ரவி மோகன் இயக்குநராகவும் திரையுலகில் தடம் பதிக்கிறார்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக விவான் ஆம்பரோஸ், இசையமைப்பாளராக ஹைட்ரோ மற்றும் கலை இயக்குநராக சௌந்தர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் ஆடை வடிவமைப்பாளராகப் பிரவீன் ராஜ் பணியாற்றுகிறார். யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்களை இன்னும்‌ ரகசியமாக வைத்துள்ள படக்குழு, விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...