தமிழ் சினிமாவில் தனித்துவமான குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த அருள்தாஸ், தற்போது ‘ரீயூனியன்’ (Reunion) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மிரட்டலான ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷாட்ஸ் ரக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜெயகுமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்ரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி, ஜெயச்சந்திரன் மற்றும் ‘காக்கா முட்டை’ ரமேஷ், பூவையார் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக விக்கி மேக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஜாக்கி டிஜே இசையமைத்துள்ளார். ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகத் திரையில் மிரட்டி வந்த அருள்தாஸ், முதன்முறையாக முழுநீள ஹீரோவாகக் களம் இறங்குவது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
