'த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – மே 21ல் உலகம் முழுவதும் வெளியீடு

த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
'த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – மே 21ல் உலகம் முழுவதும் வெளியீடு

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரும் மே 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி வெளியிடப்பட்டுள்ளது. ‘த்ரிஷ்யம்’ மற்றும் அதன் இரண்டாம் பாகம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜார்ஜ் குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையில் நடைபெறும் புதிய திருப்பங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் மீனா , அன்சிபா ஹாசன் , எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...