மலையாள திரையுலகின் பிரபல நடிகர்களான பாசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள "அதிரடி" திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை அருண் அனிருத்தன் மற்றும் ஃபால்சன் கரியா இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், தர்ஷனா ராஜேந்திரன், ஜாவித் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பாசில் ஜோசப், டொவினோ தாமஸ் மற்றும் ஆனந்த் சமீர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. டிரெய்லரில் கல்லூரி பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
