திரையுலகின் முன்மாதிரி தம்பதிகளாகத் திகழும் சூர்யா - ஜோதிகா குறித்த சுவாரசியமான தகவல்களை நடிகர் சிவகுமார் மற்றும் ராதிகா சரத்குமார் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டனர்.
காதலைச் சேர்த்து வைத்த ராதிகா?
நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, "சூர்யா ஆரம்பத்தில் செட்டில் யாரிடமும் பேசாமல் மிகவும் வெட்கப்படுவார். அவரிடம் தைரியமாகப் பேசுமாறு கூறி, அமைதியாக இருந்த ஜோதிகாவிடம் பேசச் சொன்னதே நான்தான்," என நினைவுகூர்ந்தார். இதைக் கேட்ட சிவகுமார் நகைச்சுவையாக, "என் மகனையும் ஜோதிகாவையும் சேர்த்து வைத்த 'அயோக்கியப் பெண்ணே' இவர்தான்!" என்று கூற, அரங்கமே சிரிப்பொலியால் நிறைந்தது.
சூர்யாவின் காதல் உறுதி
சூர்யாவின் காதலுக்கு சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட வதந்திகளுக்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்
"ஜோதிகாவைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன், இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் சிங்கிளாகவே இருந்துவிடுவேன்" என சூர்யா நான்கரை ஆண்டுகள் உறுதியாக நின்றார். "திரையில் 150 பேரை காதலித்த நான், என் மகனின் நேர்மையான காதலுக்கு எப்படித் தடை சொல்ல முடியும்? இது 'ஜெனியூன் கேஸ்' என்று அவனது காதலுக்கு சல்யூட் அடித்தேன்," என சிவகுமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
