ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ திரைப்படத்தில் சிறப்பு பாடலில் ஸ்ருதி ஹாசன் நடனம்

புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

3 மணி நேரத்திற்கு முன்
ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ திரைப்படத்தில் சிறப்பு பாடலில் ஸ்ருதி ஹாசன் நடனம்

சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிவராஜ்குமார் , திவ்யேந்து சர்மா , ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இசையை A. R. ரஹ்மான் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை R. ரத்னாவேலு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை நவீன் நூலி செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா கவனித்துள்ளார்.

‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் , ராம் சரண் உடன் இணைந்து நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடலுக்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த பாடல் படப்பிடிப்புடன் ‘பெத்தி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி திரைப்படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...