பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு – திரைத்துறைக்கு பெரிய இழப்பு

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3 மணி நேரத்திற்கு முன்
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு – திரைத்துறைக்கு பெரிய இழப்பு

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்க்கு செல்லும் வழியில், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் அவர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கடுமையான காயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முக்கிய பங்கு வகித்த ஆர்.பி. சௌத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்தவர். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் செயற்பட்ட அவர், 1980-களில் தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.

அவரது தயாரிப்பில் வெளிவந்த நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், ஜில்லா,துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் படைப்புகளாக உள்ளன. மொத்தமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும், பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதோடு, வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களை தொடர்ந்து வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக அவர் கருதப்படுகிறார். இவரது இரு மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகில் மட்டும் அல்லாது அவர்கள் ரசிகர்கள் மனதிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, தென்னிந்திய திரைப்படத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...