எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவிக்கு பதிலாக ருக்மணி வசந்த் இணைவு

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 மணி நேரத்திற்கு முன்
எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவிக்கு பதிலாக ருக்மணி வசந்த் இணைவு

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தை கௌதம் தின்னூரி இயக்க, இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார்.

இந்த பயோபிக் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது சாய் பல்லவி நடித்துவரும் பிற படங்களின் பணிகள், குறிப்பாக “ராமாயணம்” உள்ளிட்ட திரைப்படங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு பதிலாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம் மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் கொண்டு வர படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...