காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் கிளாசிக் காதல் திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளன. அந்த வரிசையில், நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமான 'மௌனம் பேசியதே' வரும் பிப்ரவரி 13, 2026 அன்று மறுவெளியீடு (Re-release) செய்யப்பட உள்ளது. காதலர் தின ஸ்பெஷல் ரீ-ரிலீஸ்:
தற்போது தமிழ் திரையுலகில் பழைய சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் வெளியிடும் கலாச்சாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மௌனம் பேசியதே, மின்னலே, காதலர் தினம், உயிருள்ளவரை உஷா நான்கு முக்கியத் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, குறிப்பாக இளைய தலைமுறை ரசிகர்கள் இத்திரைப்படங்களைத் திரையில் காண ஆவலாக உள்ளனர்.
சூர்யா மற்றும் லைலாவின் நெகிழ்ச்சி:
இப்படத்தின் மறுவெளியீட்டை ஒட்டி, படத்தின் நாயகன் சூர்யா அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் 'மௌனம் பேசியதே' படத்தின் புகழ்பெற்ற வசனங்களைப் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து, இப்படத்தின் நாயகி லைலா தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் இப்படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்கள், நட்சத்திரங்களுடன் பணியாற்றிய சுவாரசியமான நினைவுகள், படம் மீண்டும் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சி ஆகியவற்றை லைலா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் வசூல் ரீதியாகவும், மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
