மே 8ல் வெளியாகும் “29” – ரத்னகுமார் இயக்கத்தில் காதல் கதையாக உருவான புதிய படம்

மே 8ஆம் தேதி திரையரங்குகளில் "29" படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 மணி நேரத்திற்கு முன்
மே 8ல் வெளியாகும் “29” – ரத்னகுமார் இயக்கத்தில் காதல் கதையாக உருவான புதிய படம்

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மே மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாக “29” திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை, "மேயாத மான்" படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ரத்னகுமார் இயக்கியள்ளார். மேலும் இவர் ஆடை மற்றும் குலுகுலு போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றார். குறிப்பாக, மாஸ்டர், விக்ரம் போன்ற பெரிய படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியும் அறியப்படுகிறார்.

“29” திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ்-இன் ஸ்டோன் பெஞ்ச், லோகேஷ் கனகராஜ்-இன் ஜி ஸ்குவாட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக, “ரெட்ரோ” படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். இவர்களுடன் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைத்தவர் ஷான் ரோல்டன். காதலை மையமாகக் கொண்ட கதை அமைப்பில் உருவாகியுள்ள இந்த படம், இளம் தலைமுறையை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படக்குழுவினால் நேற்று “29” திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...