நெல்லையில் நடைபெற்று வரும் பொருநை புத்தக திருவிழாவில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல எனத் தெளிவுபடுத்தினார்.
புத்தக வாசிப்பே துணிச்சலின் மூலாதாரம்
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை ஒரே கோணத்தில் பார்க்காமல், பல்வேறு பார்வைகளில் அணுகுவதற்கு புத்தக வாசிப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார். தனக்குள் இருந்த பயத்தை நீக்கி, தன் கதைகளை உலகுக்கு பகிரும் மொழியையும் தைரியத்தையும் அளித்தது வாசிப்புதான் என கூறினார்.
திரைப்படங்கள் சமூகப் பொறுப்புடன்
தான் இயக்கிய திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக அல்ல, சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் பேசும் முயற்சியாகவே உருவாக்கப்பட்டவை என அவர் தெரிவித்தார். சரி-தவறுகளை சிந்திக்கவும், மாற்றம் குறித்து விவாதிக்கவும் மக்களைத் தூண்டும் விதமாக தனது படைப்புகள் அமைந்துள்ளன என்றார்.
சமூகநீதி நோக்கில் கலைப்பயணம்
கலைமே தனது தளம் என்றும், அதன் வாயிலாக சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து செயல்படுவேன் என மாரி செல்வராஜ் கூறினார். ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் உயர்த்துவதற்கு வாசிப்பு முக்கிய பங்காற்றும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
