நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில், பவிஷ் நாராயணன், மற்றும் புதுமுக நடிகை நாக துர்கா கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுச்சேர்க்கிறது. இவர்களுடன் வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை சினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவை P. G. முத்தையா மற்றும் எடிட்டிங்கை தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். மேலும் கலை இயக்கத்தை P. மகேந்திரன் செய்துள்ளார்.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திரைப்படம் கோடை விருந்தாக மே 2026 ல் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நவீன காதல் கதையை மையமாக கொண்டு, பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.