கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் ‘சத்யவான் சாவித்திரி’: தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

5 மணி நேரத்திற்கு முன்
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் ‘சத்யவான் சாவித்திரி’: தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்ட்டிக் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கோர்ட்ரூம் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு எதிரான வழக்கறிஞராக மிஷ்கின் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். மேலும் ஷாருக் கேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ‘சத்யவான் சாவித்திரி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “யாராலும் தடுக்க முடியாத ஒரு சக்தி, தற்போது அவளின் ஆட்டம்” என குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளார்

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...