கவினின் 11 வது படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது அந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும்.
இந்த படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாகும் இப்படம், சமகால வாழ்க்கை முறையும் உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் வகையில் அமையும் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய விருது பெற்ற பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரவீன் பரமசிவம் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் கவின் குடும்ப மையப்படுத்தப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் மற்றும் நகைச்சுவை படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அவர், இந்த முறை உணர்ச்சி பூர்வமான கதையில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
