‘கருப்பு’ ரிலீஸ் ரத்து: கண்ணீருடன் ஆர்.ஜே. பாலாஜி

காலை 9 மணிக்கு வெளியாக இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து

1 மணி நேரத்திற்கு முன்
‘கருப்பு’ ரிலீஸ்  ரத்து: கண்ணீருடன்  ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து ஆர்.ஜே. பாலாஜி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபிநயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள நிலையில், சுவாஷிகா , இந்திரன்ஸ் , யோகி பாபு , சுப்ரீத் ரெட்டி , நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீதிமன்ற வழக்கை கதைக்களமாக கொண்டு, வழக்கறிஞர் ஒருவர் தெய்வ நம்பிக்கையுடன் சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது .மேலும் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு வெளியாக இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்குகளில் குழப்பநிலை ஏற்பட்டது. இந்த ரத்துக்கான காரணமாக தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு இடையிலான நிதி தொடர்பான பிரச்சனை கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம்முடைய துன்பங்களை மறக்கத்தான். ஆனால் படம் பார்க்க வருவதே துன்பமாக மாறக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை,” என உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

மேலும், “கருப்பன் வாரான்... வழியை மறைக்காதே என்றால் நிறைய பேர் மறித்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்,” என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...