ஜூலை முதல் வாரம் குறிவைக்கும் “சர்தார் 2”! ரிலீஸ் தேதியில் மாற்றம் – பெரிய படங்களால் தள்ளிப்போன கார்த்தியின் படம்

சர்தார் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தி மீண்டும் இணையும் சர்தார் 2 படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

4 மணி நேரத்திற்கு முன்
ஜூலை முதல் வாரம் குறிவைக்கும் “சர்தார் 2”! ரிலீஸ் தேதியில் மாற்றம் – பெரிய படங்களால் தள்ளிப்போன கார்த்தியின் படம்

இயக்குனர் பி.எஸ். மித்ரன்  இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 படத்தில், நடிகர் கார்த்தி முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் மாளவிகா மோகனன் , S. J. சூர்யா, ரஷிகா ரங்கநாதன் , ஜாஷிகா விஜய் , யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தன. ஆனாலும் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருந்ததால், ரிலீஸ் தள்ளிப்போனது.

பின்னர் ஜூன் மாத வெளியீடு குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அப்போது பான்-இந்தியா படங்களான டாக்ஸிக் மற்றும் பேட்ட போன்ற படங்கள் வெளியாக இருக்கும் காரணத்தால், மீண்டும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது, “சர்தார் 2” படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜூலை 23ஆம் தேதி சூர்யா நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் வெளியாக இருப்பதால், அதனைத் தவிர்க்கும் வகையில் “சர்தார் 2” படத்தை ஜூலை முதல் வாரத்தில் திரைக்கு கொண்டு வர தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய படங்களின் வெளியீட்டு போட்டியை கருத்தில் கொண்டு, சரியான தேதியைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...