ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் இன்று மறு ஆய்வு தணிக்கை!

தணிக்கை சிக்கல்களால் தள்ளிப்போன தவெக தலைவர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்திற்கு, இன்று மறு ஆய்வு குழுவினர் மீண்டும் தணிக்கை செய்யவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2 மாதங்களுக்கு முன்
ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் இன்று மறு ஆய்வு தணிக்கை!

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக, கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 9 என அறிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கை சிக்கலால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் மறு ஆய்வு தணிக்கை மீண்டும் நடைபெறுவதாக இருந்தது. மறு ஆய்வு குழுவில் இருந்தவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக தணிக்கை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் தணிக்கை நடைபெறும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவான திரைப்படம் என்பதாலும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும் அரசியலில் பெரும் மாற்றமாக தவெக உருவாகியிருப்பதாலும் இன்று தணிக்கை முடிவு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...