சமீப காலமாக கோடைகால வெப்பத்தை தவிர்க்க, பல பாலிவுட் நடிகர்கள் தங்களது படப்பிடிப்புகளை குளிர்ச்சியான பகுதிகளான ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்த முனைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ‘கோல்மால் ’ தொடரின் வெற்றிகரமான கூட்டணியான நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இணையும் ‘கோல்மால் 5’ படப்பிடிப்பும் தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில், ஒரு கார் அளவுக்கு நீளமான விசித்திரமான பைக் இடம்பெறுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஷர்மன் ஜோஷி , அர்ஷத் வார்சி , குணால் கெம்மு , ஷ்ரேயஸ் தல்படே மற்றும் துஷார் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
‘கோல்மால்’ தொடரின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஐந்தாவது பாகமும் அதே அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
