ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பு
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சாரா அர்ஜுன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
உலகளவில் ரூ.1250 கோடி வசூல்
வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ.1250 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆண்டு வெற்றிப் படங்களின் பட்டியலில் துரந்தர் இடம்பிடித்துள்ளது.
ஓடிடியிலும் அமோக வரவேற்பு
திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே 15.8 மில்லியன் பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இரண்டாவது வாரத்தில் மட்டும் 8.2 மில்லியன் பார்வைகள் பதிவாகியுள்ளன.
உலக டாப் பட்டியலில் இடம்பிடிப்பு
நெட்பிளிக்ஸின் Non-English Movies பிரிவில் துரந்தர் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், 11 நாடுகளில் முதல் இடத்திலும், 25 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
