மும்பை: ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கியிருந்த படம் துரந்தர். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தில் அதிகம் வசூலித்த இந்திய படங்களில் இதுதான் முதல் இடத்தை பெற்றதாவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகமான துரந்தர் 2 டீசர் ரிலீஸகியிருக்கிறது.
ரன்வீர் சிங் இந்திய அளவில் புகழடைந்த நடிகர்களில் ஒருவர். ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அவர் ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் படத்தில் நடித்தார். ஆதித்யாவின் இயக்கம் என்பதாலும்; அவருடன் ரன்வீர் சேர்ந்திருந்ததாலும் இப்படத்தின் அறிவிப்பு பாலிவுட் திரை வட்டாரத்தில் விண்ணளவு இருந்தது குறிப்பிடத்தக்கது. தெய்வத்திருமகள் சாரா: இப்படம் ஹிந்தியில் மட்டுமே உருவானது. இதில் அவருக்கு ஜோடியாக தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த சாரா அர்ஜுன் நடித்திருந்தார். ஆள் வளர்ந்து அடையாளமே தெரியாமல் இருந்த அவர்; சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அவரைத் தவிர்த்து மாதவன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருந்தது. கடந்த வருடத்தின் இறுதியில் படமானது ரிலீஸானது.