தனுஷ் நடித்த ‘கர’ படத்தின் தலைப்பில் சர்ச்சை-நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பாக சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
தனுஷ் நடித்த ‘கர’ படத்தின் தலைப்பில் சர்ச்சை-நீதிமன்றத்தில் இன்று விசாரணை

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைட்ஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தலைப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மாள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கை ஐயனார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘கரா’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, அந்தப் படத்தை தயாரித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனுஷ் நடித்த படத்திற்கும் அதே ‘கர’ என்ற தலைப்பு பயன்படுத்தப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, தனுஷ் நடித்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் அல்லது அந்த பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...