‘எல்லம்மா’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் தேவிஸ்ரீ பிரசாத். தமிழில் ‘சிங்கம்’, ‘மன்மதன் அம்பு’, ‘சச்சின்’, ‘வில்லு’, ‘வீரம்’, உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக "புஷ்பா"திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது இசையும் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன.
இந்நிலையில், இயக்குநர் வேணு எல்டண்டாடி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ திரைப்படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.
‘எல்லம்மா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ‘பார்சி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தேவிஸ்ரீ பிரசாத் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மிர்னாள் தாகூர் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி திரையுலகில் பிரபலமான மிர்னாள் தாகூர், சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளராக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட தேவிஸ்ரீ பிரசாத், தற்போது ஹீரோவாகவும் ரசிகர்களை கவருவாரா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் அதிகரித்துள்ளது.
