கான் சிட்டி படத்தின் ‘நான் தான் கிங்’ பாடல் வெளியீடு; ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

கான் சிட்டி திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘நான் தான் கிங்’ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

2 மணி நேரத்திற்கு முன்
கான் சிட்டி படத்தின் ‘நான் தான் கிங்’ பாடல் வெளியீடு; ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள கான் சிட்டி திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘நான் தான் கிங்’ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார்.

புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள கான் சிட்டி திரைப்படத்தை பவர் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், வடிவுக்கரசி , யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான முதல் பாடலான ‘கொரியன் ஃபேமிலி’ பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘நான் தான் கிங்’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை ஷான் ரோல்டன் , லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும், கான் சிட்டி திரைப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...