நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுவுக்கு அமெரிக்காவின் ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ விருது!

இந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவின் மகள் அன்ஷு, அமெரிக்காவில் உயரிய கல்வி விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

1 மாதங்களுக்கு முன்
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுவுக்கு அமெரிக்காவின் ‘ஹெர்மன் பி  வெல்ஸ்’ விருது!

அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகம் வழங்கும் இந்த ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ விருது (Herman B. Wells Award) அன்ஷுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, கல்வித் திறமை, தலைமைத்திறன் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

திரைப்பட இயக்குநர் செல்வமணி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜாவின் மகளுமான அன்ஷு, தற்போது இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Computer Science) பிரிவில் பயின்று வருகிறார். விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்ற இலக்குடன் அவர் படிப்பதோடு மட்டுமின்றி , சமூக சேவைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

இந்த விருதைக் குறித்து ரோஜா தனது X தளத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். அதில், “உன் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தைரியம் இன்றைய இந்த உயர்வுக்கு காரணம். இது ஆரம்பம் மட்டுமே. உன் சாதனை எங்களுக்கு பெருமையையும், பலருக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...