பெரம்பூர் பின்னணியில் மலரும் காதல் — “அன்பே டயானா” படப்பிடிப்பு சிறப்பு!

பெரம்பூர் கலாச்சாரத்தில் காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் “அன்பே டயானா” திரைப்படம்

1 மாதங்களுக்கு முன்
பெரம்பூர் பின்னணியில் மலரும் காதல் — “அன்பே டயானா” படப்பிடிப்பு சிறப்பு!

வடசென்னையின் தனித்துவமான கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் "அன்பே டயானா”. இந்தப் படத்தில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்கிறார். முன்னதாக “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற இவர், இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

“ஜமா” படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் இப்படத்தை இயக்குகிறார். இவர்களுடன் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதைக்களம்

இந்தப் படத்தின் கதைக்களம் சென்னை பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டது. தெலுங்கு இளைஞனும், ஆங்கிலோ-இந்திய பெண்ணும் இடையிலான காதல் கதையை மையமாக வைத்து, கலாச்சார வேறுபாடுகள் உருவாக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை படம் பதிவு செய்கிறது.

ரயில் பெட்டி தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் முழுமையான படப்பிடிப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை என இயக்குநர் தெரிவித்தார். இதுகுறித்து இயக்குநர் பாரி இளவழகன் கூறுகையில், “வடசென்னையின் உயிரோட்டமே இந்தக் கதையின் ஆதாரம். குறிப்பாக பெரம்பூரில் ஆங்கிலோ-இந்தியர்கள், தெலுங்கு மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் நீண்டகாலமாக இணைந்து வாழும் தனிச்சூழல் என்னை கவர்ந்தது. அதனால் இந்தக் கதையை முழுக்க பெரம்பூரை மையமாக வைத்து உருவாக்கினேன்,” என்றார்.

காதல், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளின் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் “அன்பே டயானா” திரைப்படம், பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...