அஜித் குமாரின் ரேசிங் பயணம் திரையில் – “கிளாடியேட்டர்ஸ்”

அஜித் குமார் , மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் சந்தித்த சவால்கள், சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பை விரிவாக வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படம் உருவாகிறது.

3 மணி நேரத்திற்கு முன்
அஜித் குமாரின் ரேசிங் பயணம் திரையில் – “கிளாடியேட்டர்ஸ்”

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் அவர்களின் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய ஆவணத் திரைப்படத்திற்கு “கிளாடியேட்டர்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம், அவரது மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் அவர் சந்தித்த சவால்கள், சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பை விரிவாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகிறது.

திரைப்படங்களைத் தாண்டி, தற்போது அஜித் குமார் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் “அஜித் குமார் ரேஸிங்” என்ற தனது சொந்த அணியை நிறுவி, பல்வேறு நாடுகளில் நடைபெறும் மோட்டார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

ஆவணப்படம் தயாரிப்பு

அவரது ரேசிங் பயணத்தை பதிவு செய்யும் வகையில், “கிளாடியேட்டர்ஸ்” எனும் ஆவணப்படமும் உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை ஏ. எல். விஜய் இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த ஆவணப்படத்தின் புரமோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

“கிளாடியேட்டர்ஸ்” படம் ஒரு தொழில்முறை பந்தய வீரராக அஜித் குமாரின் பயணத்தின் கதை மற்றும் அவரது உண்மை வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் துபாய் மற்றும் ஐரோப்பா நாடுகளில் அஜித் குமார் கலந்து கொண்ட பந்தயங்களின் பிரத்யோக காட்சிகள் இதில் இடம்பெறவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மோஷன் போஸ்டர் வெளியீடு

“கிளாடியேட்டர்ஸ்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் -யை படக்குழு சமூக வலைதளமான X-இல் வெளியிட்டுள்ளது. அதில் “பந்தயம் விரைவில் தொடங்குகிறது” என்ற குறிப்புடன், அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு திட்டம்

90 நிமிட இந்த ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.

திரைப்படங்களையும், கார் பந்தயத்தையும் சமநிலைப்படுத்தி முன்னேறி வரும் அஜித் குமார், தனது வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க “கிளாடியேட்டர்ஸ்” அறிமுகப்படுத்தியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...