Ravi Mohan | மனைவி பற்றி குற்றச்சாட்டு.. கண்டித்த நீதிமன்றம்.. மன்னிப்பு கேட்ட ரவிமோகன்!

கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக ரவி மோகன் திடீரென அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது.

G

எழுதியவர்

7 மணி நேரத்திற்கு முன்
Ravi Mohan | மனைவி பற்றி குற்றச்சாட்டு.. கண்டித்த நீதிமன்றம்.. மன்னிப்பு கேட்ட ரவிமோகன்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொதுவெளியில் தனது திருமண வாழ்க்கை பற்றி கருத்து தெரிவித்ததற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். பாரம்பரிய சினிமா பின்னணியை சேர்ந்த ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் தங்களது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக ரவி மோகன் திடீரென அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாகவும், மகன்களைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாடகி கெனிஷாவுடன் காதல்

அதேசமயம் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு காரணம் பிரபல பாடகி கெனிஷா உடன் ரவிமோகனுக்கு இருந்த காதல் உறவே காரணம் என சொல்லப்பட்டது. விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து பொதுவெளியில் ரவி மோகன் கெனிஷாவுடன் தோன்றினார். அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆர்த்தி இந்த விவாகரத்து விஷயத்தில் விருப்பமில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

காதல் பிரிவும் - ரவிமோகன் ஆதங்கமும்

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் இருதரப்பும் எந்தவித கருத்துக்களையும் பொதுவெளியில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் பாடகி கெனிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனக்கு ஆர்த்தியால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இனிமேல் ரவி மோகன் வாழ்க்கையில் தான் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு மறுநாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு பதில் அளித்த ஆர்த்தியின் அம்மாவும் பிரபல தயாரிப்பாளருமான சுஜாதா விஜயக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதைப் பற்றி பேச முடியாது என தெரிவித்திருந்தார்.

அதேசமயம் ரவி மோகன் மீது தங்களுக்கு இப்போதும் மரியாதை உள்ளதாகவும், அவர் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.

பகிரங்க மன்னிப்பு

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவை மீறி ரவி மோகன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தன்னைப் பற்றி பேசியதாக ஆர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் நீதிபதிகள் ரவி மோகனை கண்டித்ததால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தனது கருத்தால் மனவேதனை அடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வருத்தம் மற்றும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாளிதழ்களில் மன்னிப்பு கோரி ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...