94 வயதிலும் உற்சாகம் குறையாத சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் – “சிங் கீதம்” வெளியிட்டு தேதி அறிவிப்பு

படம் வருகிற ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
94 வயதிலும் உற்சாகம் குறையாத சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் – “சிங் கீதம்” வெளியிட்டு தேதி அறிவிப்பு

இந்திய திரையுலகின் மூத்த மற்றும் சிறப்பு மிக்க இயக்குநரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான “சிங் கீதம்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படைப்பாளியின் புதிய அத்தியாயம்

94 வயதிலும் படைப்பாற்றலை இழக்காமல் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கி வரும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனது 61வது திரைப்படமாக “சிங் கீதம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை வெறும் மூன்று மாதங்களில் முடித்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு

இந்த படத்தில் முன்னணி நடிகர்களான ஐயான், அகில்யா மற்றும் ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை நாக அஸ்வின் தயாரித்து உள்ளார்.

பல மொழிகளில் சாதனை புரிந்த இயக்குநர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ள சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், இந்திய சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாக திகழ்கிறார்.

அவரது முக்கிய படைப்புகளில் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனா காமராஜன், மகளிர் மட்டும் மற்றும் காதலா காதலா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கமல்ஹாசனின் பாராட்டு

இந்திய திரையுலகில் அவருடைய பங்களிப்பை பாராட்டும் வகையில், நடிகர் கமல்ஹாசன் “அபூர்வ சிங்கீதம்” என்ற பெயரில் சிறப்பு நிகழ்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

டீசர் & வெளியீட்டு அறிவிப்பு

சமீபத்தில் வெளியான “சிங் கீதம்” டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், படம் ஜூன் 11ஆம் தேதி வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

94 வயதிலும் உற்சாகத்துடன் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், “சிங் கீதம்” படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர உள்ளார் என்பது எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...