ஏப்ரல் 1 முதல் ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் மாற்றம்: முழு கட்டணம் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் முழு கட்டணமும் திரும்பக் கிடைக்கும்; 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் கிடைக்காது என்ற புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலாகின்றன.

M

எழுதியவர்

1 மாதங்களுக்கு முன்
ஏப்ரல் 1 முதல் ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் மாற்றம்: முழு கட்டணம் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?

உறுதி செய்யப்பட்ட (Confirmed) ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வது தொடர்பான விதிகளில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

புதிய ரத்து கட்டண விவரங்கள்

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்துக் கட்டணப் பிடித்தம் மாறுபடும். அதன் விவரம் வருமாறு:

72 மணி நேரத்திற்கு முன்பாக: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், கிளார்க் கட்டணம் (Clerkage charge) அல்லது சேவை கட்டணம் மட்டுமே பிடிக்கப்பட்டு, மீதமுள்ள முழு கட்டணமும் பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும்.

72 முதல் 24 மணி நேரத்திற்குள்: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

24 முதல் 8 மணி நேரத்திற்குள்: ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

8 மணி நேரத்திற்குள்: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ டிக்கெட்டை ரத்து செய்தால், எவ்விதக் கட்டணமும் திருப்பித் தரப்பட மாட்டாது.

இதர மாற்றங்கள்

கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்வதைத் தவிர்க்கவும், மற்ற பயணிகளுக்கு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வரை, ஏறும் இடத்தை (Boarding point) மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை எந்தவொரு ரயில் நிலைய கவுண்ட்டர்களிலும் ரத்து செய்து கொள்ளலாம்.

இந்தப் புதிய மாற்றங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...