சீன ராணுவத்தில் கருப்பு ஆடு.. அணு ஆயுத விஷயத்தில் கோட்டை விட்ட தலைமை! கேம் ஆடும் அமெரிக்கா!

சீன ராணுவத்தில் கருப்பு ஆடு...

3 மாதங்களுக்கு முன்
சீன ராணுவத்தில் கருப்பு ஆடு.. அணு ஆயுத விஷயத்தில் கோட்டை விட்ட தலைமை! கேம் ஆடும் அமெரிக்கா!

என்ன பிரச்சனை? ஜெனரல் சாங் யுக்ஸியா, அரசியல் குழுக்களை உருவாக்கியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராணுவ கொள்முதல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகவும், பதவி உயர்வுகளுக்காக பெரும் லஞ்சம் பெற்றதாகவும் எழுந்த புகாரை விசாரிக்கையில், ஜெனரல் சாங் யுக்ஸியா சிக்கியிருக்கிறார். தற்போது இவர் தொடர்பான விஷயங்களை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு நேற்று உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சாங் மீது விசாரணையை அறிவித்திருக்கிறது. ஜெனரல் சாங் யுக்ஸியா, கட்சியின் ஒழுக்கம் மற்றும் அரசுச் சட்டங்களை மீறியதாகச் சந்தேகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான எந்த விவரங்களையும் அமைச்சகம் பொது வெளியில் பகிரவில்லை.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...