ஈரான் மண்ணில் அமெரிக்க விமானத்தை வேட்டையாடிய சீனா? ரகசியமாக கைமாறிய ‘மேன்பேட்ஸ்’ ஏவுகணை... அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

கடந்த மாதம் ஈரானில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம், சீனா மறைமுகமாக வழங்கிய அதிநவீன ரேடார் வசதி மற்றும் சீனத் தயாரிப்பு தோள் ஏவுகணை மூலமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

M

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
ஈரான் மண்ணில் அமெரிக்க விமானத்தை வேட்டையாடிய சீனா? ரகசியமாக கைமாறிய ‘மேன்பேட்ஸ்’ ஏவுகணை... அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பான தகவல் புதிய புலனாய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது.

மறைமுகமாக ராணுவ உதவி செய்த சீனா

இதுகுறித்து பிரபல அமெரிக்க ஊடகமான என்பிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூண்ட இக்கட்டான சூழலில், சீனா மறைமுகமாக ஈரானுக்குப் பல்வேறு ராணுவ உதவிகளை வழங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் பறக்கும் ‘ஸ்டெல்த்' தொழில்நுட்பம் மற்றும் மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் அதிநவீன ரேடார் அமைப்புகளை ஈரானுக்கு சீனா ரகசியமாக வழங்கியதாக நம்பப்படுகிறது.

அதிநவீன போர் விமானத்தை வீழ்த்திய தொழில்நுட்பம்

சீனா கொடுத்த இத்தகைய நவீனக் கருவிகள் மூலமாகவே, அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ ஸ்டிரைக் ஈகிள் போன்ற போர் விமானங்களின் நடமாட்டத்தை ஈரானால் மிகத் துல்லியமாகக் கண்காணிக்க முடிந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் பலமாக சந்தேகிக்கின்றனர். இந்தத் தொழில்நுட்ப உதவியைக் கொண்டே அமெரிக்க விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதாக என்.பி.சி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

டிரம்ப் குறிப்பிட்ட 'மேன்பேட்ஸ்' ஏவுகணை

இந்த விபத்து குறித்து முன்னதாகவே கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கப் போர் விமானமானது மனிதர்கள் தங்கள் தோளில் இருந்து ஏவும் ‘மேன்பேட்ஸ்' வகை ஏவுக்கணையின் மூலமாகவே தாக்கப்பட்டுக் கீழே வீழ்த்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அதிபரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது அந்த ஏவுகணை சீனத் தயாரிப்புதான் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஏவுகணையின் கொடூரத் திறன்

மனிதர்கள் தங்களது தோள்களிலேயே மிக எளிதாகச் சுமந்து சென்று, தாழ்வாகப் பறக்கக்கூடிய போர் விமானங்களை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு இந்தச் சிறிய ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்த அதிபயங்கர ஏவுகணைகள் 7 அடி நீளமும், சுமார் 40 பவுண்ட் எடையும் கொண்டவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...