அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் உட்பட மொத்தம் 8 போர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறி மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் அதிரடிப் பேச்சு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பேசிய டிரம்ப், "எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூண்டிருக்கும்; இதன் மூலம் சுமார் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் என்னிடம் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளும் போரை நிறுத்தவில்லை என்றால் 200 சதவீத வரி விதிப்பேன் என்று தான் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் மறுப்பு
கடந்த 2025 மே மாதம் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையின் போது எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் (DGMO) நேரடியாகப் பேசித்தான் போர் நிறுத்தத்தை மேற்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
