உலகின் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மை நிலவுகின்ற நாடுகளில் ஒன்றாக கருதப்படும் தென் கொரியாவில், இந்த போட்டி ஆண்டுதோறும் சியோல் மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
சியோலில் உள்ள ஹான் நதிக்கரையிலுள்ள யோயுடோ ஹாங்கங் பூங்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் 170-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியாளர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்களா என்பதை பரிசோதிக்க, திட்டமிட்ட விதமாக இரைச்சல்கள், கொசுச் சத்தங்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படுத்தப்பட்டன.
இத்தகைய சவால்களை மீறியும் அமைதியான, தொடர்ச்சியான தூக்கத்தை பராமரிக்கும் திறனின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், போட்டியாளர்களின் இதயத் துடிப்பும் கண்காணிக்கப்பட்டது. இதயத் துடிப்பு சீராகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
இந்த ஆண்டுப் போட்டியில், பல இளைஞர்களை பின்னுக்குத் தள்ளி 80 வயது முதியவர் ஒருவர் முதலிடம் பெற்று சுமார் ரூ.32,000 பரிசுத் தொகையை வென்றார்.
மக்களிடம் ஓய்வு நேரத்தில் நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
