லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் வம்சாவளி நித்யாராமன் போட்டி

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள மேயர் தேர்தலில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நித்யாராமன் போட்டியிடுகிறார்.

2 மணி நேரத்திற்கு முன்
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் வம்சாவளி நித்யாராமன் போட்டி

அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனுவை அவர் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளார். 1981ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த நித்யாராமன், ஆறு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாட்டிலும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (MIT) நகர்ப்புற திட்டமிடலிலும் உயர்கல்வி பெற்றார்.

சில காலம் சென்னை திரும்பிய அவர், துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறிய அவர், வீடற்றோருக்கான சேவைகளை வழங்கும் “SELAH” என்ற அமைப்பை தொடங்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டார்.

2020ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரசபைத் தேர்தலில், முன்னணி அரசியல் தலைவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்ற நித்யாராமன், அந்த நகரசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

தற்போது மேயர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கியுள்ள அவர், நகர்ப்புற திட்டமிடல் நிபுணராகும் தனது அனுபவம் மற்றும் சமூக சேவை பின்னணி காரணமாக வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரன் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது போல, நித்யாராமனும் லாஸ் ஏஞ்சல்ஸ் அரசியலில் முக்கிய மாற்றத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...