அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு சவால்: புதிய ‘V4’ மாடலை அறிமுகப்படுத்திய சீனாவின் டீப்சீக் நிறுவனம்

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவின் டீப்சீக் நிறுவனம் புதிய ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகில் கவனம் ஈர்த்துள்ளது.

1 மாதங்களுக்கு முன்
அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு சவால்: புதிய ‘V4’ மாடலை அறிமுகப்படுத்திய சீனாவின் டீப்சீக் நிறுவனம்

அமெரிக்க நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், டீப்சீக் நிறுவனம் ‘V4’ எனும் புதிய ஏஐ மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மிகப் பெரிய அளவிலான தரவுகளை குறுகிய நேரத்தில் செயலாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஒரு மில்லியன் வார்த்தைகள் வரை உள்ள தகவல்களைப் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய திறன் இந்த மாடலுக்கு உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் , ‘AI Pro’ மற்றும் ‘flash’ எனும் இரண்டு விதமான பதிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இந்த புதிய ஏஐ மாடல்கள் சிக்கலான கணக்கீடுகள், தரவு பகுப்பாய்வு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணிகளை துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவும் என கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மனித சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறனை கணினிகளுக்கு வழங்கும் நோக்கில் முன்னேறி வரும் நிலையில், டீப்சீக் நிறுவனம் தனது புதிய முயற்சிகளின் மூலம் தனித்துவத்தை நிரூபித்து வருகிறது.

இந்த முன்னேற்றம், அமெரிக்காவின் முன்னணி ஏஐ நிறுவனங்களுக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...