நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் விவாரத்துக்கு வருவதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் தனது வழக்கறிஞர் மஞ்சுளா மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர் அளித்த மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும் மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கை மீறுவதற்கு சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வரும் இருபதாம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
