திரையுலக நட்சத்திரமான திரிஷா மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக விமானத்தில் சீரடிக்குச் செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் இந்தப் பயணம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
பயணிகள் பட்டியலை வெளியிட்ட தவெக
இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் விஜய்யுடன் விமானத்தில் பயணித்தவர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை (Passenger Manifest) தமிழக வெற்றிக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். இன்று (29.04.2026) சென்னையில் இருந்து சீரடிக்குச் சென்ற அந்தத் தனியார் விமானத்தில் பயணித்த 8 நபர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் திரிஷா பெயர் இல்லை
அந்தப் பட்டியலின்படி, சி. ஜோசப் விஜய் (C Joseph Vijay), சி. ராஜேந்திரன், பி. ஜெகதீஷ், நயீம் ஆயிட்டண்டி கூவகண்டி, என். ஆனந்த் என்கிற முனுசாமி, விஷ்ணு ரெட்டி எர்ராடொட்டி, நேத்ரா ரெட்டி எர்ராடொட்டி மற்றும் நேகா ரெட்டி எர்ராடொட்டி ஆகியோரே பயணித்துள்ளனர். இந்தப் பட்டியலில் நடிகை திரிஷாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திரிஷா விஜயுடன் செல்லவில்லை என்பது தெளிவாகி உள்ளது.
