புதிய சபாநாயகராக ஜெ.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்பு

தவெக கட்சியின் எம்.எல்.ஏ- ஜெ.சி.டி. பிரபாகர் தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

1 மணி நேரத்திற்கு முன்
புதிய சபாநாயகராக ஜெ.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்பு

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று இரண்டாவது நாளாக கூடியுள்ளது . இதில் தவெக கட்சியின் எம்.எல்.ஏ- ஜெ.சி.டி. பிரபாகர் தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், சபை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் அவரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய சபாநாயகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் உரையாற்றி பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “முதல்வர் விஜய் மற்றும் தவெக தலைவர் இல்லங்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் இல்லங்களுக்கும் சென்று வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

இந்த அணுகுமுறையால் அரசியல் நாகரிகம் வளர வேண்டும். அதேபோல் சட்டசபையிலும் அந்த நாகரிகம் தொடர வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு என்று கூறினார். மேலும் ஆளுங்கட்சியின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...