ரூ.1000 உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு

புதுமைப்பெண் – தமிழ் புதல்வன் திட்டம் தொடரும் என அரசு உறுதி

1 மணி நேரத்திற்கு முன்
ரூ.1000 உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு

முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்திருந்த நிலையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ₹1000 உதவித்தொகை தற்போது மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தற்போது உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழும் மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது.

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த மாத உதவித்தொகை வழங்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், கல்வி சார்ந்த நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படாது என்றும் உறுதியளித்தார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதிய அரசு அமைந்ததால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நிலுவையில் இருந்த இந்த மாத ₹1000 உதவித்தொகை இன்று மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...