CM Vijay: பயிர்க்கடன் தள்ளுபடி.. கொந்தளித்த விவசாயிகள்.. எதிர்ப்பு தெரிவித்த தவெக வேட்பாளர்!

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களான நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
CM Vijay: பயிர்க்கடன் தள்ளுபடி.. கொந்தளித்த விவசாயிகள்.. எதிர்ப்பு தெரிவித்த தவெக வேட்பாளர்!

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தவெக அளித்த வாக்குறுதி

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கியிருந்தால் அவை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து கடன் வாங்கியிருந்தால் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் விஜய் ஆட்சியில் அமர்வதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.

தவெக அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களான நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், சிறு விவசாயிகள் கடன் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமானது 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28ஆம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒன்று, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொன்று என தவெக அரசின் இரட்டை நிலைப்பாட்டை விவசாயிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். தலைமைச்செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். ஜூன் 1ம் தேதி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன.

தவெக வேட்பாளர் விஜய்க்கு கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் உழவர் உரிமை இயக்கம் மாநிலத் தலைவராக உள்ள அருள் ஆறுமுகம், 2026 சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால் முதலில் வாக்குறுதிபடி அறிவிப்பு கொடுத்துவிட்டு தேதி வாரியாக இரண்டு மூன்று கட்டங்களாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கலாம்.இது விவசாயிகளிடம் பெறும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும்.தமிழக அரசே உடனடியாக உங்கள் அறிவிப்பை மாற்றி வாக்குறுதிபடி செயல்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், “முட்டு கொடுக்க முடியாது. விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் தான் இந்த பாரபட்சமான கடன் தள்ளுபடி என்பது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, நீங்கள் வாக்குறுதி தரவில்லை உத்திரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம். உடனடியாக சிறு குறு விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் மற்றும் பெரு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யுங்கள்.

உங்களுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது. ஐஏஎஸ்களின் பேச்சை கேட்டு இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது. இது தவெகவின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும். தேர்தல் வாக்குறுதிபடி செயல்படுத்துங்கள” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...