விஜய்க்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் கூட்டணி கட்சிகள்.. இதுதான் விஷயமா?

கேட்காமலேயே கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வை அள்ளி அள்ளிக் கொடுக்கும் விஜய் 5 ஆண்டுகாலம் தவெக ஆட்சியை தக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

G

எழுதியவர்

3 மணி நேரத்திற்கு முன்
விஜய்க்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் கூட்டணி கட்சிகள்.. இதுதான் விஷயமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கூட்டணி கட்சிகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் ட்விஸ்ட்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் தவெக ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அவர் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை மட்டுமே கேட்டார். அப்படியே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய 5 கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து தவெக கூட்டணிக்குள் நுழைந்தது.

அமைச்சரவையில் இடம் கொடுத்த விஜய்

இதற்கெல்லாம் நன்றிக் கடனாக முதலமைச்சர் விஜய் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்தார். தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இந்த கட்சிகள் அமர்ந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் தவெக நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான மாநிலங்களவை இடம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதனையும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் கொடுத்து விட்டது.

இப்படி கேட்காமலேயே கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வை அள்ளி அள்ளிக் கொடுக்கும் விஜய் 5 ஆண்டுகாலம் தவெக ஆட்சியை தக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அந்த கூட்டணி கட்சிகள் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் நெருக்கடி

காரணம் அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஆனால் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளில் ஆளும் கட்சி மட்டுமே இருக்கிறது. கடந்த ஆட்சியில் இந்த பதவிகளை கூட்டணி கட்சிகள் கேட்டும் திமுக தலைமை தர மறுத்து விட்டது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பகிரும் முடிவில் உறுதியாக இருக்கும் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு இதுபோன்ற உயர் பதவிகளையும் விட்டுக் கொடுப்பார் என்ற நினைப்பில் அனைத்து கட்சிகளும் உள்ளது. இதனை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் உறுதி செய்துள்ளார். ஆனால் கடைக்கோடி மக்கள் வரை செல்ல வேண்டுமென்றால் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் உதவும் என்பதால் விஜய் என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...