என்னை இழுக்காதீர்கள்! - நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கொடுத்த 'நோஸ்கட்' பதில்

விஜய் குறித்து பேசும்போது தன்னைப் பற்றி அவதூறாகக் குறிப்பிட்டதற்காக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்கு முன்
என்னை இழுக்காதீர்கள்! - நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கொடுத்த 'நோஸ்கட்' பதில்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன.

நயினார் நாகேந்திரனின் சர்ச்சை கருத்து

சேலத்தில் நடைபெற்ற விஜய் தலைமையிலான கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சித்தார். அப்போது, "விஜய் முதலில் தன் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்... திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், அப்போதுதான் அவருக்கு வெளியுலகம் தெரியும்" என்று தனிப்பட்ட ரீதியில் ஒரு கருத்தைக் கூறினார்.

திரிஷாவின் பதிலடி

இந்தக் கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தனது வழக்கறிஞர் மூலமாக பிப்ரவரி 15 அன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

அதில் ஒரு மூத்த அரசியல் தலைவரிடமிருந்து இத்தகைய கருத்து வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தன்னை அரசியல் விவாதங்களுக்குள் இழுக்க வேண்டாம் என்றும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு அரசியல் தலைவர் தனது அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கு, சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பெயரையும் பயன்படுத்துவது மிகவும் மலிவான தந்திரம் என்றும் "பெண்களை வெறும் காட்சிப் பொருளாகவும், அரசியல் கிண்டலுக்கு கருவியாகவும் பார்க்கும் மனப்பான்மை கண்டிக்கத்தக்கது என்றும் திரிஷாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் அவதூறு பரப்பினால், நயினார் நாகேந்திரன் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...