இன்று காலை வெளியானது தமிழக 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

1 நாட்களுக்கு முன்
இன்று காலை வெளியானது தமிழக 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகலாம் என்ற தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் இன்று மே 8, 2026 காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பார்க்கலாம். தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களை பயன்படுத்தலாம்:

tnresults.nic.in⁠

dge. tn. gov. in

மாணவர்கள் “TN Class 12 Result 2026” என்ற இணைப்பை கிளிக் செய்து, பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட பிறகு முடிவுகளை காண முடியும். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...