“குதிரை பேரம் இல்லை; குதிரை வேக ஆட்சி தான்” – சட்டசபையில் விஜய் அதிரடி

“இந்த அரசு குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல; குதிரை வேகத்தில் செயல்படும் அரசு” என்று சட்டசபையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

47 நிமிடங்களுக்கு முன்
“குதிரை பேரம் இல்லை; குதிரை வேக ஆட்சி தான்” – சட்டசபையில் விஜய் அதிரடி

தமிழக சட்டசபையில் அரசின் நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், “நான் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து உரையாற்றிய அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

மேலும், “காங்கிரஸ் குறிப்பிட்டது போல இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும். முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்” என்று கூறினார்.

அதேபோல், “தமிழகத்தை ஆண்ட பல்வேறு கட்சிகளின் அரசுகள் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி செயல்பட்டுள்ளன. அந்த அரசுகள் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்கள், சமூக நீதிக்கான சட்டங்கள் மற்றும் தமிழக முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றியே இந்த ஆட்சி நடைபெறும்” என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசு குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனுக்காக குதிரை வேகத்தில் செயல்படும் அரசாகவே இது இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...