தமிழ்நாட்டில் அரசுத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், மாவட்ட வாரியாகத் துறை சார்ந்த பணிகளைக் கண்காணித்து முடுக்கிவிடவும் புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் அமைச்சர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விரிவான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குரிய மாவட்டங்கள்
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகளின் விவரம் பின்வருமாறு:
- விழுப்புரம் மற்றும் கடலூர்: N. ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை)
- சென்னை மற்றும் திருவண்ணாமலை: ஆதவ் அர்ஜுனா (பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை)
- மயிலாடுதுறை: P. வெங்கடரமணன் (உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை)
- திருவள்ளூர்: ரா. குமார் (செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை)
- திருநெல்வேலி: நெ. மரிய வில்சன் (நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை)
- பெரம்பலூர்: ராஜ்மோகன் (பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை)
- காஞ்சிபுரம்: க. தென்னரசு (வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை)
- திருப்பத்தூர்: R.V. ரஞ்சித்குமார் (வனத்துறை)
- செங்கல்பட்டு: த. சரத்குமார் (மனிதவள மேலாண்மைத் துறை)
- கள்ளக்குறிச்சி: வன்னி அரசு (சமூக நீதித் துறை)
- இராணிப்பேட்டை: வ. காந்திராஜ் (கூட்டுறவுத் துறை)
- தருமபுரி மற்றும் அரியலூர்: ப. ராஜ்குமார் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை)
- நாகப்பட்டினம்: A.M. ஷாஜகான் (சிறுபான்மையினர் நலத்துறை)
- தஞ்சாவூர்: வினோத் (வேளாண்மை - உழவர் நலத்துறை)
- திருச்சி: ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை)
- கரூர்: சி. விஜயலக்ஷ்மி (பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை)
- நாமக்கல்: த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)
- திருப்பூர்: டாக்டர் K.G. அருண்ராஜ் (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை)
- நீலகிரி: செ. கமல் (கால்நடைத்துறை)
- வேலூர்: ம. விஜய் பாலாஜி (கைத்தறி, துணி நூல் மற்றும் காகிதத் துறை)
- ஈரோடு: K.A. செங்கோட்டையன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை)
- கோவை: வே. சம்பத்குமார் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை)
- மதுரை மற்றும் தேனி: R. நிர்மல்குமார் (எரிசக்தி மற்றும் சட்டத்துறை)
- புதுக்கோட்டை: ஜா. முகமது பர்வேஸ் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை)
- சிவகங்கை: டாக்டர் T.K. பிரபு (இயற்கை வளங்கள் துறை)
- கிருஷ்ணகிரி: S. கீர்த்தனா (தொழில்துறை)
- விருதுநகர்: கு. ஜெகதீஸ்வரி (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை)
- திருவாரூர்: பெ. விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை)
- தூத்துக்குடி: ஸ்ரீநாத் (மீன் வளம் - மீனவர் நலத்துறை)
- இராமநாதபுரம்: பெ. மதன் ராஜா (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை)
- சேலம்: ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத்துறை)
- கன்னியாகுமரி: செ. ராஜேஷ் குமார் (சுற்றுலாத்துறை)
- தென்காசி: ராஜீவ் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை)
- திண்டுக்கல்: க. விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)
இந்த புதிய நியமனங்களின் மூலம், அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் இனி அமைச்சர்களின் நேரடிக் கண்காணிப்பில் விரைவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
