புகைப்படக் கலைஞராக ஆசைப்படுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் 5 நாள் சிறப்புப் பயிற்சி!

சென்னையில் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் 5 நாள் திருமண புகைப்படக் கலை மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சிக்குத் தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
புகைப்படக் கலைஞராக ஆசைப்படுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் 5 நாள் சிறப்புப் பயிற்சி!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் "5 நாள் திருமண புகைப்படக் கலை மற்றும் வீடியோ எடிட்டிங்" (Wedding Photography & Video Editing) பயிற்சியை நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியில் புகைப்படக் கலையின் அடிப்படை முதல் நவீனத் நுட்பங்கள், எடிட்டிங், ஆல்பம் டிசைனிங் மற்றும் புகைப்படத் தொழிலை லாபகரமாக நடத்துவது எப்படி என்பது வரை விரிவாகக் கற்றுத்தரப்படும். பயிற்சியின் இறுதியில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்.

முக்கிய விவரங்கள் மற்றும் தகுதிகள்:

தேதி: மார்ச் 23 முதல் 27 வரை, 2026

நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இடம்: EDII-TN, சிட்கோ கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.

தகுதி: 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் (குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு).

வசதிகள்: தங்குவதற்கு விடுதி வசதி உண்டு (குறைந்த கட்டணம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை).

பதிவு செய்யும் முறை:

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 8668102600 / 8754495254 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...