வெற்றி போதையா? மது போதையா? நண்பர்களுடன் தள்ளாடிய தஞ்சை தவெக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ!

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன் மது போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

M

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
வெற்றி போதையா? மது போதையா? நண்பர்களுடன் தள்ளாடிய தஞ்சை தவெக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் சரவணன், மது போதையில் தனது நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ஆதரவாளர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் நடனமாடியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. போதை கலாச்சாரத்திற்கு எதிராகத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் தவெக தலைவர் விஜய், இப்படி பொது வெளியில் குடித்து விட்டு ஆட்டம் போடும் ஒருவரை எப்படி வேட்பாளராக முன்னிறுத்தினார் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேட்பாளரின் பின்புலம் தெரியாமல் சரியாக நேர்காணல் செய்யாமல் மக்கள் பிரதிநிதியாக ஒருவரை முன்னிறுத்துவது சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ வாளால் கேக் வெட்டியது விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தஞ்சை எம்.எல்.ஏ-வின் இந்த வீடியோ தவெக தலைமையிற்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. அரசியல் களத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தலை சந்தித்த தவெக, இது போன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் என்ன மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பதவியேற்பதற்கு முன்பே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சிக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் போதை கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசிய விஜய் தற்பொழுது என்ன நடவடிக்கை எடுப்பார் என்றும் மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...